Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காலையிலேயே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி; கிடுகிடுவென உயர்ந்த சிலிண்டர் விலை!

காலையிலேயே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி; கிடுகிடுவென உயர்ந்த சிலிண்டர் விலை!

மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கான எரிபொருள் வரத்து தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வணிக எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், உணவகங்கள், தேநீர்க்கடைகள் மற்றும் விடுதிகள் போன்றவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், வீட்டு உபயோக எரிவாயு விநியோகத்திலும் கால தாமதம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன. எற்கனவே வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அதிர்ச்சி தரும் விதமாக இன்று (01-05-26) வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டரின் விலை மாதந்தோறும் முதல் தேதியில் விலை அதிகரிப்பு அல்லது குறைவு என மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில், வணிக பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை 993 ரூபாய் உயர்ந்து 3,071.50 ரூபாய்க்கு இன்று (01.05.2026) முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் வணிக சிலிண்டரின் விலை ரூ.2,246.50 இருந்த நிலையில், இன்று ரூ.993 உயர்ந்து ரூ.3,071க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran