தில்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளரும் உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞருமான ராம் சங்கர் ராஜாவை தங்களது சட்டமன்றதிற்கு வரவேற்று அந்த மாகாணத்தின் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கௌரவித்து உள்ளார்.
அரசின் பாராட்டு சான்றில் ராம் சங்கர் ராஜா இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகவும், தில்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளராகவும் அவர் ஆற்றி வரும் சிறப்பான சேவைக்காக இந்த பாராட்டு கனடா நாட்டின் ஒன்டாரியோ மாகாணத்தின் சார்பில் வழங்கப்படுவதாக தெரிவித்து உள்ளார்.
சட்டத் துறையில் ராம் சங்கர் அவர்களின் அர்ப்பணிப்பு, நீதிக்கான அவரின் உறுதிப்பாடு, மற்றும் தமிழ் சமூகத்திற்கு சேவை செய்வதில் அவர் காட்டும் அயராத முயற்சிகள் ஆழமாக பாராட்டப்படுவதாக கூறியுள்ளார்.
அவரின் தலைமைத்துவம் சட்டம் மற்றும் சமூக பிணைப்புகளை வலுப்படுத்தி வருவாதாகவும் அவரின் தொடர்ச்சியான வெற்றிக்கும் சேவைக்கும் தனது மனமார்ந்த நன்றியையும், நல்வாழ்த்துக்களையும் அரசின் தெரிவித்துக் கொள்கொள்வதாக கூறி உள்ளார். ராம் சங்கர் ராஜ தனது கனடா பயணத்தின் போது கனடிய தமிழ் சங்கம், உலக தமிழ் ஆய்வு மாநாடு, உலக தமிழ் ஆசிரியர் மாநாடு, படிமுறை தமிழ் ஒன்றியம் போன்ற பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
தமிழர் வாழும் நாடுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தேவையான பங்களிப்பை தில்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் என்றும் தரும் என்றும் அடுத்த தலை முறையினர் தமிழ் மொழியில் சிறந்து தமிழ் தொண்டு ஆற்றும் தமிழர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களை நாடுதோறும் சென்று நேரில் வாழ்த்தி வருகிறார்.

