Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கார் ரேஸ் மைதானத்திற்கு வருகை தந்த முதல்வர் விஜய்!

கார் ரேஸ் மைதானத்திற்கு வருகை தந்த முதல்வர் விஜய்!

மிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான லண்டனுக்கு நேற்று முன்தினம் (10.09.2026) இரவு புறப்பட்டுச் சென்றார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டில் இந்த வார இறுதியில் நடைபெறும் புகழ்பெற்ற 'மிச்செலின் லீ மேன்ஸ் கப்' கார் பந்தயத்தில் முதலமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளார்.

இந்த சர்வதேசப் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, இன்று (12.09.2026) நடைபெற உள்ள 'சில்வர்ஸ்டோன் ரவுண்ட்' பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார். அதிலும் குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரமும் கார் பந்தய வீரருமான அஜித் குமார், நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா படேல் உள்ளிட்ட இந்திய வீரர்கள் இப்போட்டியில் களம் இறங்குக உள்ளனர். அவர்களை நேரில் கண்டு உற்சாகப்படுத்தவும் முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் கார் பந்தயம் நடைபெறும் சில்வர் ஸ்டோன் மைதானத்திற்கு முதல்வர் விஜய் வருகை தந்துளார்.

அச்சமயத்தில் முதல்வர் விஜயிடம், அங்கிருந்த தமிழர்கள் ஆர்வமுடன் ஆட்டோகிராப் பெற்று மகிழ்ந்தனர். தமிழர்களின் அன்பையும் ஆர்வத்தையும் முதல்வர் விஜய் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயப் போட்டியை முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளான விஜய் மற்றும் அஜித் குமார் ஆகிய இருவரும் சர்வதேச விளையாட்டு மேடையில் ஒரே புள்ளியில் இணைய உள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, உலகம் முழுவதும் உள்ள அவர்களது ரசிகர்களிடையேயும், விளையாட்டு ஆர்வலர்களிடையேயும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran