Dailyhunt
கார் உதிரி பாகங்கள் குடோனில் பயங்கர தீ விபத்து- சென்னையில் பரபரப்பு

கார் உதிரி பாகங்கள் குடோனில் பயங்கர தீ விபத்து- சென்னையில் பரபரப்பு

சென்னையில் காங்கிரஸ் தலைமையகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே உள்ள கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைந்துள்ள கட்டிடத்தில் பயங்கரத்தை விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை ஜி.பி சாலையில் உள்ள கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யக்கூடிய அங்காடிகள் செயல்பட்டு வருகிறது. இரண்டு மாடி கொண்ட கே.ஆர்.கம்பெலெக்ஸ் கட்டிடத்தின் மொட்டை மாடியில் குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. கார் மற்றும் வாகனங்களுக்கான ஸ்பைபர் உதிரிபாகங்கள் அங்கு இருப்பு வைக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இன்று மதியம் மூன்று மணிக்கு இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கட்டிடத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீ விபத்து குறித்து அறிந்து வெளியே ஓடினர். மேலும் உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும், பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நான்குக்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சென்னையில் பரபரப்பான பகுதியில் ஏற்பட்டுள்ள தீ விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது அந்த பகுதி மக்களுக்கு ஒரு வித அச்சத்தைக் கொடுத்திருக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran