உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், ஒரு வழக்கு விசாரணையின் போது நாட்டில் உள்ள வேலையற்ற இளைஞர்களை கரப்பான் பூச்சிகள் என்று சாடியிருந்தார்.
இதன் காரணமாக, கடந்த மே 15 அன்று இணையதளத்தில் 'கரப்பான் பூச்சி மக்கள் கட்சி' என்ற சமூக ஊடக குழு உருவாக்கப்பட்டது. இதில், லட்சக்கணக்கான இளைஞர்கள் இணைந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கடந்த மே 21 அன்று இந்த சமூக வலைத்தள (எக்ஸ்) கணக்கு மத்திய அரசால் முடக்கப்பட்டது. இதை எதிர்த்துக் கரப்பான் பூச்சி மக்கள் கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே டெல்லி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா ' கடந்த ஜூன் 21 அன்று நீட் மறுதேர்வு நடைபெற்றது. அதற்கு முன்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே குழப்பத்தைத் தவிர்க்கவே கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் சமூக வலைத்தள கணக்கு முடக்கப்பட்டது' என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நீட் தேர்வு முடிந்துவிட்டதால், இனி எந்த சிக்கலும் இல்லை. எனவே, முடக்க உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டார். இதையடுத்து, கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் சமூக ஊடக கணக்கு மீண்டும் செயல்பட அனுமதியளிக்கப்பட்டது.

