Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கொளத்தூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு!

கொளத்தூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் அப்போதைய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க.

சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ். பாபு. இதையடுத்து நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவர் கலந்து கொண்டார்.

அதன்பின்னர் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அதன்படி 72 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி (19.11.2026) பிற்பகல் 02:24 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை உள்ளிட்ட தொகுதிகளுடன் தற்போது கொளத்தூர் தொகுதியும் காலியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதி உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran