Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"மம்தா போட்டியிட்டால்; நாங்கள் வாபஸ் பெறுவோம்"; - ரிதப்ரதா பானர்ஜி

"மம்தா போட்டியிட்டால்; நாங்கள் வாபஸ் பெறுவோம்"; - ரிதப்ரதா பானர்ஜி

மேற்குவங்கத்தில், வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜி போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என அவரது கட்சி தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிருப்தி காரணமாகப் பிரிந்து சென்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், மம்தா பானர்ஜி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, வருகின்ற இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜி போட்டியிட்டால், தங்களது அணியின் வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அதிருப்தி அணித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரிதப்ரதா பானர்ஜி அறிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் உட்கட்சி பூசல் காரணமாகத் தனி அணியாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதன் தலைவரான ரிதப்ரதா பானர்ஜி, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்த அதிருப்தி அணியினர் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடுவதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அவர் போட்டியிட்டால் வேட்பாளரை நிறுத்தும் முடிவை தாங்கள் திரும்பப் பெறுவதாக ரிதப்ரதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran