Thursday, 27 Jul, 8.15 am

முக்கிய செய்திகள்
மன்னார்குடி டாக்டர் மனைவி கொலையில் இளவரசி உறவினர்களுக்கு 2 நாள் கஸ்டடி!

   

   திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மாஜி திமுக எம்.எல்.ஏ. கு.பாலகிருஸ்ணன் பேரன் டாக்டர் இளஞ்சேகரனுக்கு சேரன்குளத்தில் இருந்து திவ்யா என்ற பெண்ணை 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 17 ந் தேதி இரவு திவ்யா உடலில் பல்வேறு காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். 

 திவ்யாவின் உறவினர்கள் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சனைக்காக கொன்றுவிட்டதாக கூறி புகார் கொடுத்ததுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

     

    மன்னார்குடி காவல் நிலையம் எதிர் வீட்டில் நடந்த கொலை சம்பவம் குறித்து கோட்டாச்சியர் விசாரனை செய்தார்.

   மாப்பிள்ளையின் அத்தையை கர்நாடக சிறையில் இருக்கும் இளவரசியின் அண்ணன் வடுகநாதனுக்கு திருமணம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

   இந்த நிலையில் திவ்யாவின் அண்ணன் கொடுத்த புகாரின் பேரில் கணவர் இளஞ்சேரன், மாமனார் முத்தழகன், மாமியார் ராணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

வழக்கு விசாரனைக்காக கஸ்டடி வேண்டும் என்று மன்னார்குடி டி.எஸ்.பி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரனைக்கு வந்தது. அரசுத் தரப்பில் அரசு வழக்கறிஞர் பொற்கொடி செல்வி ஆஜராகி கஸ்டடி கேட்டார்.  டாக்டர் இளஞ்சேரன் தரப்பிற்காக திவாகரனுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்கள் தமிழரசன் மற்றும்   வீரையன் ஆஜராகி கஸ்டடி கொடுக்க கூடாது என வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஜயன் இன்று 27 ந் தேதி மாலை 5 மணி முதல் 29 ந் தேதி மாலை 5 மணி வரை விசாரனைக்காக போலிஸ் கஸ்டடி அளித்தார்.

    இந்த நிலையில் டாக்டர் தரப்புக்காக திருச்சி திமுக பிரமுகரின் மகன், இளவரசியின் சகோதரர் மகன் மற்றும் பலர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.

   - செம்பருத்தி


Dailyhunt
Top