Dailyhunt
முன்னிலையில் தவெக; விஜய் வீட்டிற்கு நடிகை திரிஷா வருகை!

முன்னிலையில் தவெக; விஜய் வீட்டிற்கு நடிகை திரிஷா வருகை!

மிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக 2026ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் மாநிலம் முழுவதும் இன்று (04-05-26) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி தவெக 108 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 64 தொகுதிகளிலும் திமுக கூட்டணியிலும் 62 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு, நடிகை திரிஷா வருகை தந்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran