சென்னை சத்தியமூர்த்தி பவனில் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று (03-10-26) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முதன் முறையாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஐயுஎம்எல் கட்சி பொதுச்செயலாளர் அபூபக்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சியின் பெ.சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை நீக்கக்கோரி இந்திய கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அக்டோபர் இரண்டாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை மாவட்ட தலைநகரங்களில் போராட்டங்கள் நடத்துவது என்றும் ஆறாம் தேதி தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட இருப்பதாகவும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன என்பது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர் விளக்கம் அளித்தார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம் இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு திமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், 'ஆர்.எஸ்.எஸ், அமித்ஷா, மோடி இவர்களுடைய அட்டூழிய ஆட்சியை யாரெல்லாம் எதிர்த்து நிற்கிறீர்களோ அவர்கள் எல்லாம் இந்தியா கூட்டணி பக்கம் வாங்க என்று ஏற்கெனவே சொல்லிவிட்டோம். 2023இல் இருந்து இந்த சண்டை நடக்கிறது. இந்த சண்டையில் யாரெல்லாம் மனஸ்தாபத்தில் இருக்கிறீர்களோ, அவர்கள் எல்லாம் இங்கு வாருங்கள். இந்த கூட்டத்தில் யாரெல்லாம் வர வேண்டுமோ அவர்களுக்கெல்லாம் எங்கள் தலைவர்கள் பேசி அழைப்பு விடுத்தார்கள், வராத தலைவர்களைப் பற்றி நான் சொல்ல முடியாது. டெல்லியில் நடந்த கூட்டத்தில் வேணுகோபால் தவெக தலைமையிடம் பேசி இருந்தார். அவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்கிறோம் என்று சொன்னார்கள், வந்தார்கள். திமுகவை பொறுத்தவரைக்கும் காங்கிரஸ் கட்சி கூட்டினால் வரமாட்டிக்கிறார்கள் என்று சொல்கிறார்களோ, அவர்களின் தான் போய் கேட்க வேண்டும்' என்று பேசினார்.

