Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"நினைவில் நிற்கக்கூடிய கதாபாத்திரங்களை வழங்கியவர்" - பிரதமர் மோடி இரங்கல்!

"நினைவில் நிற்கக்கூடிய கதாபாத்திரங்களை வழங்கியவர்" - பிரதமர் மோடி இரங்கல்!

பாலிவுட் திரையுலகின் புகழ்பெற்ற மூத்த நடிகர் நானா படேகர் (வயது 75) இன்று (அக்டோபர் 8, ) காலை 5:20 மணியளவில் கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பு காரணமாகக் காலமானார்.

முன்னதாக வீட்டில் மயக்கமடைந்த நிலையில் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவக் குழுவினர் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து அவசர சிகிச்சை அளித்தும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

இந்தி மற்றும் மராத்தி திரையுலகில் தனது தனித்துவமான குரல் வளம், ஆக்ரோஷமான மற்றும் எதார்த்தமான நடிப்புத் திறன் மற்றும் 'நாம் பவுண்டேஷன் மூலமாக விவசாயிகளுக்குச் செய்த சமூகப் பணிகளுக்காகப் பெயர்பெற்ற நானா படேகரின் திடீர் மறைவு செய்தி ஒட்டுமொத்த இந்தியத் திரைத் துறையினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் தமிழில் காலா, பொம்மலாட்டம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்குத் திரை உலகினரும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'நானா படேகர் கொண்டிருந்த தீவிரத்தன்மை, தனித்துவம் மற்றும் தனித்துவமான ஆளுமை ஆகியவற்றை மிகச் சில நடிகர்களே கொண்டிருந்தனர். அவர் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மையையும் படைப்பாற்றலையும் கொண்டு வந்தார், மேலும் பல தலைமுறைகளாக நினைவில் நிற்கக்கூடிய கதாபாத்திரங்களை நமக்கு வழங்கினார்.

அவர் தனது வெளிப்படையான மற்றும் நேர்மையான கருத்துக்களுக்காகவும் பாராட்டப்பட்டார், தான் நம்பியதை வெளிப்படுத்த ஒருபோதும் தயங்கியதில்லை. இந்தி மற்றும் மராத்தி சினிமாவுக்கு நானா படேகரின் பங்களிப்பு அளப்பரியது. அவரது மறைவு ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran