பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல்.
திருமாவளவன் நேற்று (07.07.2026) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 'தவெக ஆட்சி அமைக்கப் பெரும்பான்மைக்குத் தேவையான 2 இடங்கள் பற்றாக்குறைய இருந்ததால் ஆதரவு கோரி வி.சி.க.வுக்கு கடிதம் எழுதினர்.
இது குறித்து முடிவெடுக்கையில், அப்போது விசிக வெளியில் இருந்துதான் ஆதரவு எனத் தெரிவித்தோம். அதன் பின்னர் 10 நாட்கள் கழித்துதான் த.வெ.க. அமைச்சரவையில் இடம்பெற்றோம். அதே சமயம் இன்னும் திமுக கூட்டணியில் இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினால், ஆம் என்றுதான் சொல்ல முடியும்: தி.மு.க. கூட்டணியில் இருப்பதாகவே உணர்கிறோம். இதுவே என் பதில் ஆகும். தற்போது வரை த.வெ.க. கூட்டணியில் விசிக இணைய அதிகாரப்பூர்வமாக எந்த நிகழ்வும் நடைபெறவில்லை.
தவெக கூட்டணி தொடர்பாக ஆதரவு கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஜூலை 1-ம் தேதி முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இருப்பினும் அந்தக் கூட்டத்தில் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. எனவே த.வெ.க. தலைமையில் இன்னும் கூட்டணி அமையவில்லை என்பதுதான் இன்றைய நிலை' எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.
கோப்புப்படம்அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர், 'த.வெ.க. அமைச்சரவையில் நாங்கள் (வி.சி.க.) இடம்பற்றி இருந்தாலும் ஸ்டாலினுடன் கருத்து பங்கேற்பில் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறோம்' என தொல். திருமாவளவன் கருத்தைப் பதிவு செய்துள்ளார். இதைப் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த வைகோ, 'நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டிய கருத்து. நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டிய கருத்து அவ்வளவுதான்' எனத் தெரிவித்தார்.

