கேரளா மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 33 வயது பெண் சம்பவத்தன்று யஷ்வந்த்பூர் கண்ணூர் ரயிலில் முன்பதிவு பெட்டியில் கடந்த 3 மாதங்களுக்கு முன் பயணித்தார்.
அந்த ரயில் அதிகாலை 1.45 மணிக்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த பெண் பயணி படுத்து இருந்த இருக்கைக்கு மேலே உள்ள இருக்கையில் பாலக்காட்டைச் சேர்ந்த நிஜாமுதீன் (38) என்பவர் படுத்திருந்தார்.
இந்நிலையில் நிஜாமுதீன் திடீரென அந்த பெண் பயணிக்கு பாலியல் ரீதியாக கைகளை தொட்டு தொந்தரவு கொடுத்தார் இது தொடர்பாக அந்த பெண் பயணி ரயில் பெட்டிலிலேயே புகார் செய்தார் பின்னர் கோழிக்கோடு சென்று அந்தப் பெண் பயணி ரயில்வே போலீசில் முறைப்படி புகார் செய்தார்.
கோழிக்கோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ஈரோடு ரயில்வே போலீசாருக்கு வழக்கை அனுப்பி வைத்தனர் . ஈரோடு ரயில்வே போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி நிஜாமுதீனை கைது செய்தனர் நிஜாமுதீன் திருமணமானவர் பி எச் டி பட்டம் பெற்று ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

