தமிழ்நாடு போலவே இன்று (04-05-26) புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
அந்த வகையில், புதுச்சேரியில் இன்று (04-05-26) வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், என்.காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான என்.ஆர். ரங்கசாமி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரியில் ஒரு தொகுதியில் அதிமுக வெற்றி அடைந்ததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உப்பளம் தொகுதியில் அதிமுக புதுச்சேரி செயலாளர் அன்பழகன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

