Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'ஒட்டுமொத்த நாட்டையும் அமைதியாக்கிய ஒரு தேர்வு'; நடந்தது என்ன?

'ஒட்டுமொத்த நாட்டையும் அமைதியாக்கிய ஒரு தேர்வு'; நடந்தது என்ன?

ஒரு தேர்வுக்காக ஒட்டுமொத்த நாடும் முடக்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவில், ஆண்டுதோறும் பல்கலைக்கழகத்துக்கான நுழைவுத் தேர்வு (சூனுங்) நடைபெறும்.

அதே போல, இந்த ஆண்டும் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் ஒரு பகுதியாக 'ஆங்கிலக் கேட்டல்' தேர்வும் நடைபெறும். அதாவது, தேர்வில் காதால் கேட்டு வினாக்களுக்குப் பதிலளிக்கும் பகுதியும் உள்ளது. அதனால், அந்த சமயத்தில் மாணவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல், அமைதியான சூழலை உருவாக்க அரசு பல முன்னேற்பாடுகளை மேற்கொண்டது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும், தங்களின் செல்போன்களை அணைத்து வைக்க அறிவுறுத்தப்பட்டனர். அதே போல, விமானச் சத்தம் கேட்காமல் இருக்க, சுமார் 35 நிமிடங்களுக்கு விமானங்கள் புறப்படுவதும் தரையிறங்குவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதனால், சுமார் 130 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களின் நேரங்களில் மாற்றம் ஏற்பட்டது. அதே சமயத்தில், போக்குவரத்து சத்தங்கள் கேட்காமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டன. மேலும், அரசு அலுவலகங்களின் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டது.

தேர்வின் போது, மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் பல்வேறு சிறப்புக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், குறிப்பிட்ட தேர்வு நேரத்தில் நாடு முழுவதும் எந்தவித சத்தமும் கேட்காத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடந்த வியாழன் (19-11-26) அன்று, நாடு முழுவதும் 1,312 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வில் சுமார் 5.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதினர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran