திருவள்ளூரில் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் பேசுகையில், ''கடன் வைத்துவிட்டுப் போய் உள்ளீர்கள்.
அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள். 13 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. எல்லாவற்றிலும் நஷ்டம். எல்லாவற்றிலும் ஊழல் நடந்துள்ளது. அதையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். ஒரு தனிநபர் மீது ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க் கடன் வைத்துள்ளீர்கள். நிதிப் பற்றாக்குறை இருக்கிறது.
எங்கள் தலைவர் சட்டமன்றத்தில் பேசிய அடுத்த நொடியே நடையைக் கட்டுகிறீர்கள். ஓடுகிறீர்கள் வெளியே. பதில் இல்லை. அடுத்த சட்டமன்றம் வருகிறது இருங்கள். பட்ஜெட் தொடர் வர இருக்கிறது. ஒரு பார்ட்டி ஃபண்டு தானே சொன்னார். அடுத்து மதுரை ஊழல் ஒன்று இருக்கிறது. அதற்கு ஆடிட்டிங் போட்டாச்சு. கார்ப்பரேஷன் ஊழல் குறித்து ஆடிட்டிங் போட்டாச்சு. அடுத்தது இந்து அறநிலையத்துறையில் அதில் ஒரு ஆடிட்டிங் போட்டுள்ளோம். ஒவ்வொன்றாக வெளியே வரும். என்ன செய்து வைத்திருக்கிறார்கள் இந்த ஐந்து வருடத்தில் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்'' என்றார்.

