Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய கார்!

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய கார்!

சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே சாலையில் பெண் ஒருவர் மற்றும் ஓட்டுநர் என இருவர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த பெண் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரும் நல்வாய்ப்பா எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்புப் பணியாளர்கள் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, காரில் பயணித்த இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்துக்குள்ளான காரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. அதே சமயம் சுமார் 10 அடி அகலம் கொண்டதாகக் கூறப்படும் இந்த பள்ளத்தைச் சீரமைக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இந்த சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், இந்த பகுதியில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், சாலையில் ஏற்பட்ட இந்த பள்ளம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பள்ளத்தை முழுமையாகச் சீரமைக்க மேலும் கால அவகாசம் தேவைப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து நீடிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran