Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிரித்துக்கொண்டே பேட்டி கொடுத்த ஐ.ஜி. ரம்யா பாரதி? : நெட்டிசன்கள் கண்டனம்!

சிரித்துக்கொண்டே பேட்டி கொடுத்த ஐ.ஜி. ரம்யா பாரதி? : நெட்டிசன்கள் கண்டனம்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கோவை மண்டல ஐஜி ரம்யா பாரதி நேற்று (23.05.2026) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளிப்பதற்கு முன்பாக எடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வீடியோ பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்தும், வழக்கு குறித்தும் பேசிக் கொண்டிருக்கும் போது, உயர் காவல்துறை அதிகாரியான ஐ.ஜி. ரம்யா பாரதி மற்றும் உடன் இருந்த சில அதிகாரிகள் சிரித்தபடியும், புன்னகைத்தபடியும் பேசிய காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவியதை அடுத்து, பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் இவ்வாறு அலட்சியமாக நடந்துகொள்வது அவர்களின் அநாகரிகமான மற்றும் உணர்வற்ற போக்கைக் காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் விரைவாகக் கைது செய்யப்பட்டாலும், அதிகாரிகளின் இந்த நடத்தை ஒட்டுமொத்த காவல் துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் தங்களது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கடுமையாகச் சாடி வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது அரசியல் மற்றும் சமூக தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்து. அதோடு சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran