Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிறு*மிக்குக் கூட்டுப் பாலி*யல் தொல்*லை : 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது!

சிறு*மிக்குக் கூட்டுப் பாலி*யல் தொல்*லை : 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது!

ஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்குக் கூட்டுப் பாலியல் தொல்லை கொடுத்த 3 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

பேராவூரணி பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது பாட்டி ஊரில் நடந்த திருவிழா காணக் கடந்த 30 ந் தேதி சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே பழக்கமான தன்னை காதலிப்பதாகக் கூறிய புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 24) வந்துள்ளார். அப்போது சிறுமி தனியாக வந்ததைப் பார்த்த சந்தோஷ் நாம் சீக்கிரமே கல்யாணம் செய்துக்கலாம் என்று கூறி சிறுமியைத் தனியாக ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இவர்கள் ஒதுக்குப்புறமாக ஒதுங்கிச் செல்வதைப் பார்த்த அடைக்கத்தேவன் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் (வயது 20) மற்றும் அருகில் உள்ள பகுதியைச் அவனது நண்பர்களான 18, 17, 15 வயது சிறுவர்கள் என 4 பேரும் மறைவான இடத்தில் இருந்த சந்தோஷை அடித்து விரட்டிவிட்டு அரவிந்த் மற்றும் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேரும் 16 வயது சிறுமிக்குக் கூட்டுப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

மேலும் இது பற்றி வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டி அனுப்பி உள்ளனர். இந்த கூட்டுப் பாலியல் தொல்லையால் உடல் சோர்ந்து அவர்களிடம் இருந்து தப்பி வீட்டிற்கு வந்த சிறுமி பயத்தில் தன் குடும்பத்தினரிடம் கூட இது பற்றி தகவல் கூறாமல் இருந்துள்ளனர். ஆனால் இந்த துயரச் சம்பவம் ஊருக்குள்ளும் தெரிய வந்ததையடுத்து சேதுபாவாசத்திரம் போலிசார் இதுபற்றி விசாரித்து போக்சோ வழக்குப் பதிவு செய்து சிறுமியின் காதலன் மற்றும் 3 சிறுவர்கள் உள்பட 5 பேரைக் கைது செய்துள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran