Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"சொல்லக் கூடாதுன்னு இருந்தேன், ஆனால் தேவையில்லாமல்..." - திமுகவுக்கு சி.வி.சண்முகம் பதிலடி!

"சொல்லக் கூடாதுன்னு இருந்தேன், ஆனால் தேவையில்லாமல்..." - திமுகவுக்கு சி.வி.சண்முகம் பதிலடி!

மிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், துறைகள் ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நேற்று (27-08-26) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதித்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 10.5% உள்ஒதுக்கீட்டை எதிர்த்து முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் உறவினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த நிலையில், இன்று (28-08-26) அவை மீண்டும் கூடியதும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு அத்துறையின் அமைச்சர் சம்பத்குமார் பதிலளித்து அறிவிப்புகளை வெளியிட்டார். அதனை தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் திடீரென எழுந்து நின்று, 'நேற்றைய தினம் இந்த அவையில் பேசிய சி.வி.சண்முகம் தவறான பதிவை வெளியிட்டார். வன்னியர்களுக்கான 10% இடஒதுக்கீட்டுக்கு இடையூறாக எங்கள் தலைவரின் உறவினர் தான் வழக்குத் தொடுத்தார் என்று கூறியிருக்கிறார். அது எந்த வழக்கு? கிளை நம்பர் என்ன? யார் போட்டது? என்பதை அவர் சொல்வாரா? பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை கொடுத்தது எங்களுடைய தலைவரின் குடும்பம். எனவே இந்த தவறான தகவலை இந்த அவையில் வைப்பது ஏற்கத்தக்கதல்ல. அதனால் அதை நீக்க வேண்டும்' என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த சி.வி.சண்முகம், 'நான் இப்போதும் சொல்வேன், என்றைக்கும் சொல்லுவேன். அதை நான் சொல்லக்கூடாது என்று தான் நேற்றும் இருந்தேன். தேவையில்லாமல் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டதால் அந்த பெயரை சொல்ல வேண்டியிருக்கிறது. ஆதாரத்துடன் தான் பேசுகிறேன். வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்கக்கூடாது என்று 2021இல் நடைபெற்ற அவர் சார்ந்த சமூகத்தினுடைய பேரவைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த பெயரில் தான் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது அந்த வழக்கிலும் வாதாடியது அவர்கள் தான். அதை மறுக்க முடியாது' என்று கூறினார். அதற்கு திமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்துப் பேசிய சபாநாயகர், 'வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து மு.க.ஸ்டாலினின் உறவினர் தான் வழக்கு தொடுத்தார் என்று சொன்னதற்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆதாரம் கேட்கிறார். சி.வி.சண்முகம் ஆதாரம் இருந்தால் காட்டுங்கள், இல்லையென்றால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுவேன்' என்று கூறி இந்த பிரச்சனையை முடித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran