Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சொத்து தகராறில் பெட்ரோல் குண்டு வீசிய நபரால் பரபரப்பு

சொத்து தகராறில் பெட்ரோல் குண்டு வீசிய நபரால் பரபரப்பு

ஈரோட்டில் சொத்து தகராறு காரணமாக பெட்ரோல் பாம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் கள்ளியம்புதூர், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்லமுத்து ( 61) வெல்டிங் வேலை பார்த்து வருகிறார் .இவரது உறவினர் மோகன் (45) என்பவர் அதே பகுதியில் வசித்து வருகிறார்.

மோகனுக்கு செல்லமுத்து தாய்மாமன் முறையாவார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு செல்ல முத்துவும் அவரது தம்பி ரங்கநாதன் என்பவரும் சேலம் மாவட்டம் பேரூரில் உள்ள குடும்ப பொது சொத்தினை பங்கு பிரிக்கும் பொழுது மேற்படி மோகனின் அம்மா ராசம்மாள் என்பவருக்கு பணம் ரூ.5 லட்சம் கொடுத்து சொத்தை மேற்படி செல்லமுத்துவும் அவரது தம்பி ரங்கநாதனும் எழுதி வாங்கி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மோகன் தனது தாய்யை ஏமாற்றி தாய் மாமாக்கள் சொத்தை எழுதி வாங்கி விட்டதாகக் கூறி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் . இந்நிலையில் நேற்று இரவு மோகன் தனது இருசக்கர வாகனத்தில் தாய்மாமன் செல்லமுத்து வீட்டிற்கு வந்துள்ளார் . தான் கொண்டு வந்த ஒரு லிட்டர் வாட்டர் கேனில் பெட்ரோல் ஊற்றி செல்லமுத்து வீட்டை நோக்கி வீச முற்பட்ட பொழுது பெட்ரோல் மோகன் கை மீது பட்டதால் செல்லமுத்து வீட்டுத் திண்ணையில் வீசி விட்டு சென்று விட்டார்.

ஆனால் பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. இதனால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. எனினும் இதுகுறித்து செல்லமுத்து பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருந்துறை உதவி ஆய்வாளர்கள் பிரகாஷ் , மேகநாதன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran