Dailyhunt
"சுதீஷ் ஜி அத எடுத்து வச்சுருங்க..." - ராஜ்ய சபாவில் கட்சித் துண்டை எடுக்க சொன்ன சி.பி.ராதாகிருஷ்ணன்!

"சுதீஷ் ஜி அத எடுத்து வச்சுருங்க..." - ராஜ்ய சபாவில் கட்சித் துண்டை எடுக்க சொன்ன சி.பி.ராதாகிருஷ்ணன்!

மாநிலங்களவை உறுப்பினர்களான என். ஆர். இளங்கோ, பி. செல்வராசு, எம். தம்பிதுரை, திருச்சி சிவா, கனிமொழி என்.வி.என்.

சோமு மற்றும் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதியுடன் முடிவடையுள்ளதை ஒட்டி, இந்த காலி இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெற இருந்தது. இதில் திமுகவிற்கு 4 இடங்களும், அதிமுகவிற்கு 2 இடங்களும் கிடைத்தன.

இதனையடுத்து திமுக சார்பில் திருச்சி சிவா, ஜெ. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், அதிமுக சார்பில் எம். தம்பிதுரை, காங்கிரஸ் கட்சி சார்பில் எம். கிறிஸ்டோபர் திலக், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து 6 வேட்பாளர்களும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். அதாவது காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட இடங்களுக்குக் கூடுதலாக வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யாததால், தேர்தல் நடத்தப்படாமல் போட்டியின்றி வெற்றி பெற்றதாக கடந்த மார்ச் 9ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

அந்த வகையில் திமுக சார்பில் 2 உறுப்பினர்களும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேமுதிக சார்பில் தலா ஒருவரும் என மொத்தம் 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதே போன்று அதிமுக கூட்டணியில் அதிமுக சார்பில் ஒருவரும், அதன் கூட்டணிக் கட்சியான பாமக சார்பில் ஒருவரும் என மொத்தம் 2 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்சி சிவா, ஜெ. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், அன்புமணி ராமதாஸ், எம். கிறிஸ்டோபர் திலக், எல்.கே. சுதீஷ் மற்றும் எம். தம்பிதுரை ஆகியோர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று (06.04.2026) பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த பதவி பிரமாணத்தின் போது எல்.கே.சுதீஷ் தேமுதிக கட்சித் துண்டுடன் பதவியேற்க முன்வந்தார். அப்போது மாநிலங்களவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், 'சுதீஷ் ஜி, அதை எடுத்து வச்சுருங்க' என தமிழ் மொழியில் கட்சித் துண்டை கீழே வைக்க சொன்னார். அதனை ஏற்றுக்கொண்ட சுதீஷ், தான் அணிந்திருந்த கட்சித் துண்டை இருக்கையில் போட்டு பதவியேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து, அங்கிருந்து சென்று சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்துப் பெற்றார். அப்போது எல்.கே.சுதீஷ், 'கேப்டன் போட்டைவ மட்டும் காட்டிறேன்' என்று கூற அதற்கு சி.பி.ராதாகிருஷ்ணன் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து எல்.கே.சுதீஷ், விஜயகாந்த் புகைப்படத்தை அவை முன்பு காண்பித்துச் சென்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran