Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தந்தை கண்முன்னேயே பறிபோன மகளின் உயிர்- திருவாரூரில் அதிர்ச்சி

தந்தை கண்முன்னேயே பறிபோன மகளின் உயிர்- திருவாரூரில் அதிர்ச்சி

திருவாரூரில் தந்தை முன்பே மகள் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூரில் சைக்கிள் கடை வைத்திருப்பவர் குமார். இவருடைய மகள் லேகா. பொறியியல் பட்டதாரியான இவருக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து மயிலாடுதுறையைச் சேர்ந்த ஒருவருக்கு வரன் பேசி முடித்து நிச்சயதார்த்தம் செய்து வைத்திருந்தனர். இதனால் லேகாவும் மயிலாடுதுறையைச் சேர்ந்த அந்த நபரும் நெருக்கமாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக அந்த நபர் லண்டனில் வேலை பார்ப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் சொன்னது பொய் லண்டனில் வேலை பார்க்கவில்லை கோழிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வருவது தெரிந்தது. இதனால் இந்த திருமணம் வேண்டாம் என லேகாவின் பெற்றோர்கள் முடிவு எடுத்தனர். பெற்றோரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த லேகா இது குறித்து தன்னுடைய பெற்றோர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் தந்தை குமார் முன்பே லேகா மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. காப்பாற்ற முயன்ற தந்தையும் தீக்காயத்துடன் மீட்கப்பட்டார். இருவரும் திருவாரூர் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி லேகா உயிரிழந்தது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran