Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'தவறாகப் பயன்படுத்துவதாகப் புகார்'; இந்தியர்களுக்கான விசா சலுகை முற்றிலும் ரத்து

'தவறாகப் பயன்படுத்துவதாகப் புகார்'; இந்தியர்களுக்கான விசா சலுகை முற்றிலும் ரத்து

இந்தியச் சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 30 நாள் விசா இல்லாத பயண அனுமதியை மலேசிய அரசு ரத்து செய்துள்ளது.

கொரோனா பெருந்​தொற்​றுக்​குப் பிறகு சுற்​றுலாவை மேம்​படுத்த, இந்​தி​யர்​களுக்கு 30 நாட்​கள் விசா இல்​லாமல் தங்​கும் சலுகையை கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்​பர் மாதத்தில் மலேசியா அரசு அறி​முகப்​படுத்​தி​யது. இதனால், மலேசியா செல்​லும் இந்​தி​யர்​களின் எண்​ணிக்கை பல மடங்கு அதி​கரித்​தது. ஆனால், இந்​தச் சலுகை சிலரால் தவறாகப் பயன்​படுத்​தப்​படு​வ​தாக கோலாலம்​பூரில் உள்ள இந்​தி​யத் தூதரகம் சமீபத்​தில் எச்​சரிக்கை விடுத்​திருந்​தது.

இந்நிலை​யில், மலேசிய அரசு வெளி​யிட்​டுள்ள அறிவிப்​பில், 'வருகின்ற 2027 ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்​தி​யர்​களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா விலக்கு சலுகை ரத்து செய்யப்படுகிறது. எனவே, மலேசியா வரும் இந்​தி​யர்​கள், பயணத்​துக்கு முன்​பாகவே முறை​யான விசா பெற்​றிருக்க வேண்டும். இதற்​கான விசா விண்​ணப்​பங்​களை 2026 டிசம்​பர் 1-ம் தேதி முதல் 'மை விசா' என்ற இணை​யதளம் வழி​யாக சமர்ப்​பிக்​கலாம்' என்று தெரிவித்துள்ளது.

மேலும், விசா விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டாலும், நிராகரிக்கப்பட்டாலும் அல்லது பயணத் திட்டங்கள் மாறினாலும் செலுத்தப்பட்ட விசா செயலாக்கக் கட்டணம் (பிராசஸிங் பீஸ்) திருப்பித் தரப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம் 2026 டிசம்பர் 31 வரை மலேசியா செல்பவர்கள் வழக்கம் போல விசா இல்லாமல் 30 நாட்கள் தங்கும் சலுகையைக் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran