Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
த.வெ.க. எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு கனிமொழி கொடுத்த ரியாக்‌ஷன் வைரல்!

த.வெ.க. எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு கனிமொழி கொடுத்த ரியாக்‌ஷன் வைரல்!

மிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் பேசிய வார்த்தையும், அதற்கு அக்கட்சியின் மற்றொரு பெண் எம்.எல்.ஏ கொடுத்த ரியாக்‌ஷனும் இணையத்தில் பெரும் வைரலாகி விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் த.வெ.க சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட அருள் விக்னேஷ் இன்று (01.09.2026) உரையாற்றினார். அப்போது அவர் பேரவைத் தலைவருக்கும் தனது தொகுதி மக்களுக்கும் நன்றி தெரிவிக்க முயன்றபோது, "மனமார்ந்த நன்றி" என்று கூறுவதற்குப் பதிலாக, தவறுதலாக "மன்மத நன்றி" என்று உச்சரித்தார். இவர் இவ்வாறு தடுமாறிப் பேசிய அடுத்த சில விநாடிகளிலேயே, அவருக்கு முன்வரிசையில் அமர்ந்திருந்த கோவை கவுண்டம்பாளையம் தொகுதியின் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் தனது கண்களை உருட்டி ஒரு சுவாரஸ்யமான ரியாக்‌ஷனை வெளிப்படுத்தினார்.

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவை விவாதத்தின் போது, எம்.எல்.ஏ கனிமொழி பேசும்போது "மனமார்ந்த நன்றி" என்பதற்குப் பதிலாக "மன்மத நன்றி" எனக் கூறி அவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியிருந்தார். அந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு பெரும் பேசுபொருளாகியிருந்த நிலையில், தற்போது அதே கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏவும் அதே தவறைத் திரும்பச் செய்துள்ளார். தனது சொந்த 'டயலாக்கை' சக கட்சி உறுப்பினரே மீண்டும் பேசியதை உணர்ந்த கனிமொழி, "ஆமா இது என் டயலாக் ஆச்சே" என்பது போல முகபாவனையை மாற்றியது. இதைக் கண்ட அருகில் இருந்த பிற சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் கையை மூடிச் சிரித்தனர். இந்த வேடிக்கையான சட்டசபை நிகழ்வின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு, வைரலாகி வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran