Dailyhunt
த.வெ.க. தலைவர் விஜய் பாட்டுப் பாடித் தேர்தல் பரப்புரை!

த.வெ.க. தலைவர் விஜய் பாட்டுப் பாடித் தேர்தல் பரப்புரை!

மிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன.

இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இத்தகைய சூழலில் தான் தேர்தலை முன்னிட்டு திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட, த.வெ.க. தலைவரும் நடிகருமான விஜய் தனது வேட்புமனுவை இன்று (02.04.2026) தாக்கல் செய்தார். இதனையடுத்து திருச்சி கிழக்கில் பரப்புரையை தொடங்குவதற்கு முன்பு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மரக்கடை பகுதியில் விஜய் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பாடலை பாடி பரப்புரை மேற்கொண்டார்.

அதில், 'நான் தன்னந்தனி ஆளு. நீ ஏழனமா பாரு. கொஞ்சம் நகர்ந்தேனா இங்கே எட்டு கோடி பேரு மிரள போகுது ஸ்டேட்டு. எங்கள் விசில் சத்தம் கேட்டு. நல்லவங்க வாழ நீ விசிலுக்க் அடி ஓட்டு. கடைசி நம்பிக்கை மக்கள தேடி வருது. அதை இருக்கி புடிச்சு ஒரு வரலாறு எழுது. உங்க விஜய் நான் வரேன். விசில் அடிக்க ரெடியா?' எனப் பாடலை பாடினார். முன்னதாக கடந்த மார்ச் 30ஆம் தேதி பெரம்பூர் தொகுதிக்கு தனது முதல் வேட்புமனுவை விஜய் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran