Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தவெகவில்  இணைந்த வகைச்செல்வன், புகழேந்தி

தவெகவில் இணைந்த வகைச்செல்வன், புகழேந்தி

மாற்றுக் கட்சியினர் பலரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்து வரும் சூழலில் குறிப்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுவரை மாற்றுக் கட்சிகளில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்களை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து புகைப்படம் எடுக்கப்படாமல் இருந்த நிலையில், முதலமைச்சரான பிறகு விஜய் இரண்டாவது முறையாக கட்சியின் தலைமை அலுவலகமான பனையூருக்கு சனிக்கிழமையான இன்று வருகை தந்துள்ளார். மேலும் புதிதாக கட்சியில் இணைத்தவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுவது குறித்து முக்கிய ஆலோசனை இன்று நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்தநிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் வைகைச்செல்வன் மற்றும் அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும் அண்மையில் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இருந்த பெங்களூரு புகழேந்தி ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக அதிமுகவில் இருந்து விலகிய வைகைச்செல்வன், 'புதிய இடத்தில் நடுவதற்கு புடுங்கிப் போன செடியில் இருக்கும் பழைய மண்ணைப் போல' இந்த இயக்கத்திற்காக ஆற்றிய என் பழைய நினைவுகளை என்ன செய்வது என்று எனக்கே தெரியவில்லை' என உருக்கமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran