Dailyhunt
தேர்தல் ரிசல்ட்; மேற்கு வங்கத்தில் உதிரும் தாமரை!

தேர்தல் ரிசல்ட்; மேற்கு வங்கத்தில் உதிரும் தாமரை!

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்தலின் வாக்குப் பதிவு இன்று ஒரே கட்டமாக எண்ணப்படுகிறது.

காலை 8 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடர்ந்து நடந்து வருகிறது.

தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டுள்ள நிலையில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காலை 10 மணி நிலவரப்படி பிஜேபி 144 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் 105 தொகுதிகளிலும் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. மற்றவர்கள் 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறார்கள். அங்குள்ள மொத்த 294 தொகுதிகளில் வெற்றிப்பெற 148 தொகுதிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஃபால்ட்டா தொகுதியில் மட்டும் வன்முறை மற்றும் தேர்தல் முறைகேடுக் காரணமாக வரும் 21ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இதனால் மீதமுள்ள 293 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மம்தா தலை​மையி​லான திரிண​மூல் காங்​கிரஸ், 15ஆண்டுகளாக ஆட்சி அமைத்து வருகிறார். அவருக்கு கடும் சவாலை ஏற்படுத்தி வரும் பிஜேபி ஆட்சியை கைப்பற்றும் பாதையை நோக்கி சென்று வருகிறது. இது வெற்றி பெறும் பட்சத்தில் முதல் முறையாக பிஜேபி அங்கு காலூன்றவுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran