Dailyhunt
திமுக தோல்வி; தொலைக்காட்சியில் செய்தி பார்த்த திமுக தொண்டர் அதிர்ச்சியில் மரணம்!

திமுக தோல்வி; தொலைக்காட்சியில் செய்தி பார்த்த திமுக தொண்டர் அதிர்ச்சியில் மரணம்!

திமுக தோல்வியடைந்த செய்தியை தொலைகாட்சியில் பார்த போது அதிர்ச்சியில் திமுக கிளை செயலாளர் ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.

கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் சேத்தியாதோப்பு அருகே உள்ள கத்தாழை கிராமத்தைச் சேர்ந்த திமுக கிளை செயலாளர் பன்னீர்செல்வம் (56). இவரது மனைவி பழனியம்மாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். நெய்வேலி என்எல்சி நிறுவன ஊழியரான இவர், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையை கடந்த 4ஆம் தேதியன்று வீட்டில் தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது திமுக யாரும் எதிர்பாராத வகையில் பின்னடைவை சந்தித்து ஆட்சியை இழக்கும் நிலைக்கு போனதால் வேதனை அடைந்தவர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி மயங்கி விழுந்து உயிரிழந்தார் என கூறப்படுகிறது. மறைந்த பன்னீர்செல்வத்தின் உடலுக்கு திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran