Dailyhunt
திருச்சி மேற்குத் தொகுதியில் அமைச்சர் கே.என். நேரு தீவிர வாக்குச் சேகரிப்பு!

திருச்சி மேற்குத் தொகுதியில் அமைச்சர் கே.என். நேரு தீவிர வாக்குச் சேகரிப்பு!

மிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், நாளையுடன் (06.04.2026) நிறைவு பெறவுள்ளது. இதனையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதற்கிடையே சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. மேலும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் திருச்சியில் திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சரும், மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.என். நேரு 51வது வார்டுக்கு உட்பட்ட கூனி பஜார், செவென்த் டே பள்ளி அருகில் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவருடன் மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன் முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் முத்து செல்வம், விஜயா ஜெயராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் டோல்கேட் சுப்பிரமணி காஜாமலை விஜய், செல்வம் புஷ்பராஜ், கலைச்செல்வி ராமதாஸ் தொமுச அமைப்பாளர் குணசேகர், வழக்கறிஞர்கள் கவியரசன் ஷீலா அந்தோணி, முத்து பழனி, சோழன் சம்பத், சிந்தை கார்த்திக், எம்.ஆர்.எஸ். குமார், தஸ்தா பாய், சதீஷ் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran