Dailyhunt
திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு தீவிர தேர்தல் பரப்புரை!

திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு தீவிர தேர்தல் பரப்புரை!

மிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன.

இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி தில்லை நகர் 10வது மற்றும் 11ஆவது குறுக்கு தெருக்களில், திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கே என் நேரு பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அவருடன் மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி மாநகராட்சி செயலாளர் மேயர் அன்பழகன், கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், நாகராஜ், சுரேஷ் இளையராஜா உட்படப் பலர் உடன் சென்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran