திருச்சியில் நடந்த கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி துறையூர் சாலையில் இருந்து ஆம்னி கார் ஒன்றில் சுமார் 10 பேர் ஜம்புநாதபுரத்தை நோக்கி இன்று வந்து கொண்டிருந்தனர். முசிறி அருகே அதிவேகமாக வந்து கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருந்த மரம் ஒன்றில் திடீரென மோதியது. இந்த கோர விபத்தில், ஆம்னி காரில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மீதமுள்ளவர்கள் மீட்கப்பட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிறிது நேரத்திலேயே சிகிச்சைப் பலனின்றி படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

