தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன.
இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொன்னமராவதி தெற்கு ஒன்றிய செயல் வீரர் கூட்டத்தில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான எஸ். ரகுபதி, திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் திருமயம் விராச்சிலையில் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரிக்க வந்த திமுக வேட்பாளர் அமைச்சர் ரகுபதி அடைக்கலம் காத்தார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது ஒன்றிய செயலாளர்கள் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.

