Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'திசைதிருப்பும் நோக்கில் ஆதவ் அர்ஜுனா'-சிபிஐயிடம் திமுக புகார்

'திசைதிருப்பும் நோக்கில் ஆதவ் அர்ஜுனா'-சிபிஐயிடம் திமுக புகார்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விசாரணை சி.பி.ஐ. நடத்தி வருகிறது. இத்தகைய சூழலில் தான் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவில், 'அமைச்சர்கள் இந்த வழக்கு தொடர்பாகக் கருத்து தெரிவிக்கக் கூடாது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு, அரசு சார்பில் நிவாரணம் அளிப்பது தொடர்பான நடவடிக்கைகள் எடுப்பது நீதிமன்றத்தால் கண்காணிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு நடைபெறாவிட்டால் சி.பி.ஐ. விசாரணை திசை மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக வழக்கின் விசாரணையில் தாக்கம் ஏற்படும். அத்தகைய தாக்கம் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். அந்த நிலை ஏற்படக்கூடாது. அதைத் தவிர்ப்பதற்காக உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். விடுமுறைக் கால அமர்வுகள் மூலமாக அவசர வழக்காக இதை உடனடியாக விசாரிக்க வேண்டம்' எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (07.07.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'முதல்வர் விஜய்யின் பேச்சை உச்ச நீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என விரும்புகிறீர்களா?. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராகத் தடை விதிக்க வேண்டும் எனக் கோருகிறீர்களா?. உச்ச நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம். உங்கள் சண்டையை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள். திமுக ஆட்சியில் பதிவான வழக்கில் விஜய் குற்றம்சாட்டப்பட்ட நபராகச் சேர்க்கப்படவில்லை. அமைச்சர்கள் தரப்பில் பேசினால் அதற்கு நீங்களும், அவர்களுக்குப் பதில் பேசிக் கொள்ளுங்கள்.

தயவு செய்து ஆவணங்களைப் படித்துவிட்டு நீதிமன்றத்தில் வாதிடுங்கள்' என திமுக வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தினர். இதனையடுத்து இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி திமுக தரப்பு கோரிக்கையை ஏற்று மனுவை வாபஸ் பெற அனுமதித்ததுடன் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி சிபிஐயில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் 'சாட்சிகளை அச்சுறுத்தும் வகையிலும், விசாரணையைத் திசை திசை திருப்பும் வகையிலும் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு இருந்தது. குற்றம் சாட்டப்பட்டவரே வழக்கின் விசாரணையை திசை திருப்பும் வகையில் பேசியுள்ளார். எனவே ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு அடிப்படையில் அவர் மீது தனி வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஜூலை10 ஆம் தேதி முதல்வர் விஜய் கரூர் செல்வதை சிபிஐ உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran