Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'உள்ளாட்சித் தேர்தலில் சுவாரஸ்யம்'; டாஸ் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்!

'உள்ளாட்சித் தேர்தலில் சுவாரஸ்யம்'; டாஸ் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்!

டாஸ் மூலமாக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின், புளோரிடா மாகாணத்தில் உள்ள அட்லாண்டிக் பீச் நகர கமிஷனர் பதவிக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில், ஜெனிபர் லாக்னர் மற்றும் லிசா ஹெரால்டு என இரண்டு பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், இருவரும் தலா 3,162 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனைத்தொடர்ந்து, அதிகாரிகள் மீண்டும் நடத்திய மறுவாக்கு எண்ணிக்கையிலும் எந்த மாற்றமும் இல்லை.

இதனால், ஃபுளோரிடா மாகாண சட்டத்தின்படி, நாணயத்தைச் சுண்டி வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் டுவால் கவுண்டி தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், இரு வேட்பாளர்களும் பங்கேற்றனர். இந்த விதிகளின்படி, மொத்தமுள்ள 3 சுற்றுகளில் 2 முறை வெற்றி பெறுபவர் தேர்தல் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

அதன்படி, நாணயம் சுண்டி விடப்பட்டது. அப்போது, தலை விழும் என லிசா கணித்தார். ஆனால், பூ விழுந்ததால் முதல் சுற்றில் ஜெனிபர் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் தலை விழும் என ஜெனிபர் கணித்தார். அவர் கணித்தபடியே தலை விழுந்ததால் இந்த சுற்றிலும் அவரே வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்ற ஜெனிபர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran