Dailyhunt
விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

மிழ்நாடு போலவே இன்று (04-05-26) புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக 2026ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் மாநிலம் முழுவதும் இன்று (04-05-26) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிற்பகல் 12 மணி நிலவரப்படி தவெக 105 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 68 தொகுதிகளிலும் திமுக கூட்டணியிலும் 61 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சர்களும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை சற்று நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிட்டுள்ள நிலையில், இரண்டு தொகுதிகளும் முன்னிலை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran