Dailyhunt
'விஜய்க்கு நான் தான் எல்லாமே' - ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் யாதவ் அலப்பறை!

'விஜய்க்கு நான் தான் எல்லாமே' - ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் யாதவ் அலப்பறை!

வெக தலைவர் விஜய் தலைமையில் அமையும் புதிய ஆட்சியில் கோட்டையில் கோலோச்சப் போகும் உயரதிகாரிகள் யார் ?

என்கிற விவாதம் ஒவ்வொரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த நிலையில், திமுக ஆட்சியில் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக இருந்த கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், விஜய்க்கு எல்லாமே நான் தான். அடுத்த சி.எஸ். நான் தான். விஜய்க்கான செக்கரட்டரிகள் முதற்கொண்டு டி.ஜி.பி. வரை நான் தான் முடிவு செய்யப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பட்டியலை தயார் செய்து வருகிறார்.

உதயநிதியின் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், விஜய்யுடன் நெருங்கியிருக்கிறார். கோட்டையில் உள்ள அதிகாரிகளில் இவர் தான் தற்போது பரபரப்பாக சீக்ரெட்டாக இயங்கிக் கொண்டிருக்கிறார். அவர் தற்போது, ஸ்டாலின் மற்றும் உதயநிதி தொடர்பான அனைத்து விவகாரங்களும் எனக்குத் தெரியும். அதனாலேயே, என்னை விஜய் தேர்வு செய்திருக்கிறார். நான் தான் அடுத்த தலைமைச் செயலாளர். கோட்டையிலிருந்து ஒட்டுமொத்த திமுக ஆதரவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் கூட்டிப்பெருக்கி துடைத்து எறியப் போகிறேன். திமுகவுக்கு எல்லாமுமாக இருந்த ஒரு முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி என்னிடம் எல்லாவற்றையும் விவரித்திருக்கிறார். இனி கோட்டையில் நான் வைத்தது தான். விஜய் முழுமையாக என்னை நம்புகிறார். அவரது ஜோதிடரைப் பிடித்து விஜய்யை நெருங்கிவிட்டேன். விஜய்யின் செக்ரட்டரியாக மங்கத் ராம்மை கொண்டு வரப்போகிறேன். டி.பி.யாதவ்வை (பிரதீப் யாதவ்வின் சகலை) ஹோம் செக்ரட்டரியாக நியமிக்கப்போகிறேன். ககன்தீப் சிங் பேடியை முக்கியப் பொறுப்புக்கு கொண்டு வரப்போகிறேன் என்றெல்லாம் சொல்லி வருகிறார் பிரதீப் யாதவ்.

இதனையறிந்த சீனியர் ஐ.ஏ.எஸ்.கள், புதிய தலைமைச் செயலாளர் இவரா? ஏற்கனவே டெல்லியின் கைப்பாவையாக இருந்து வருபவர். விஜய் பாடு திண்டாட்டம் தான் என்று எதிர்மறையாக விமர்சித்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran