Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"விஜய்யை விட நான் நன்றாகவே நடனமாடுகிறேன்"; மனம் திறந்து பேசிய கேரள முதல்வர்

"விஜய்யை விட நான் நன்றாகவே நடனமாடுகிறேன்"; மனம் திறந்து பேசிய கேரள முதல்வர்

கேரளத்தில் அதிக மின்வெட்டு ஏற்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசை விமர்சிக்கும் விதமாக சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ, அம்மாநில முதல்வர் வி.டி. சதீசன் மற்றும் பின்னணியில் மின்சாரத் துறை ஊழியர்கள் இணைந்து குழு நடனமாடுவது போன்று செய்யறிவால் (ஏஐ) உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் சதீசன் மனம் திறந்து பேசியிருந்தார். அவர் பேசுகையில், 'என்னை முன்னிலைப்படுத்தி ஒரு குழு நடன வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதைப் பார்த்து, நான் மிகவும் ஆச்சரியமாகிவிட்டேன். அதில் நடிகர் மோகன்லால், என்னுடைய நண்பர் முதல்வர் விஜய்யைவிடவும் சிறப்பாக அதில் நான் நடனமாடுகிறேன். அதுவும், அவர்களை விட நான் நன்றாகவே ஆடுகிறேன்.

நீங்களும் அந்த வீடியோவை பார்த்திருப்பீர்கள். அந்த வீடியோவை செய்யறிவு மூலம் உருவாக்கியிருக்கிறார்கள். தொழில் நுட்பத்தில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அடிப்படை பாடத்திலும் இதனை மாற்ற வேண்டும். வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பாடங்களை உருவாக்க வேண்டும்' என்று பேசியிருந்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran