Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
2வது டி20 போட்டி : இங்கிலாந்து அணிக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா!

2வது டி20 போட்டி : இங்கிலாந்து அணிக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா!

News7 Tamil 1 week ago

ந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மழை காரணமாக இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கைவிடப்பட்டது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யதது. இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுக வீரராக களமிறங்குகிறார். இதன் மூலம் குறைந்த வயதில் இந்திய சீனியர் அணியில் அறிமுகம் ஆன வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களாக வைபவ் சூர்யவன்ஷியும், அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். சூர்யவன்ஷி 14 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து இஷான் கிஷனுடன் சேர்ந்து அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்த நிலையில், அபிஷேக் சர்மா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil