Dailyhunt
ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநருக்கு தவெக கடிதம்.!

ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநருக்கு தவெக கடிதம்.!

News7 Tamil 5 days ago

மிழ் நாடு சட்டமன்றத் தேர்தளுக்கு ஒரே கட்டமாக கடந்த 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 85.10 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இந்த வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தி.மு.க. கூட்டணி 74 இடங்களை பெற்றது. அதிமுக கூட்டணி 53 இடங்களை பெற்றது.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. இதனால் தவெக ஆட்சியமைக்க இன்னும் 10 இடங்கள் வேண்டும். இதற்காக காங்கிரஸ் மற்றும் பாமகவிடம் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரி தமிழ் நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் அனுப்பி உள்ளார். மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தில் '2 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என கூறப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil