Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆன்லைனில் OP சீட்டு பெறும் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் அருண்ராஜ்!

ஆன்லைனில் OP சீட்டு பெறும் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் அருண்ராஜ்!

News7 Tamil 5 days ago

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 'நலம்AI' என்ற பெயரில் WhatsApp Chatbot சேவையை மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.

இச்சேவையின் மூலம் பொது மக்கள் வீட்டிலிருந்தபடியே தங்களின் சுய பதிவு ( One time Registration) மற்றும் OP முன்பதிவை ( Appointment Booking) செய்து கொள்ள முடியும்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'மருத்துவத் துறையில் இன்று ஒரு பொன்னான நாள் . 22 மாவட்டங்களில் புதிய செயலியை தொடங்கி உள்ளோம். இதன் மூலம்OP சீட்டை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அப்பாயின்மென்ட் உறுதி செய்யும் திட்டத்தினை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கியுள்ளோம். குடும்பத்தில் ஒரு நபரிடம் செல்போன் இருந்தால் அனைத்து நபர்களுக்கும் ஆதார் எண் இல்லாமல் இந்த OP சீட்டை பெற்றுக் கொள்ள முடியும். பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது இந்த சேவை சென்னையில் துவக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களில் படிப்படியாக கொண்டு வரப்படும். இந்த சேவை மூலம் மட்டும்தான் இந்த OP சீட்டை பெற வேண்டிய அவசியம் இல்லை நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

மருத்துவ சேவையை மேம்படுத்த 7.5 இட ஒதுக்கீடு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கிட்னி திருட்டு சம்பவம் குறித்து கல்லூரிகள் மற்றும் மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரியில் புதிய கட்டணம் வசூலித்தால் இந்த 104 என்னை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம், என்று அவர் கூறினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil