Sunday, 20 Sep, 7.22 pm News7 Tamil

விளையாட்டு
ஐ.பி.எல் கிரிக்கெட் : டெல்லி - பஞ்சாப் அணிகள் இன்று இரவு பலப்பரீட்சை!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இதில் துபாயில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

ஷிகர் தவான், பிரித்வி ஷா, கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ஹெட்மயர், ரிஷாப் பண்ட் என்று டெல்லி அணி மிரட்டலான பேட்டிங் வரிசையை கொண்டிருக்கிறது. அஸ்வின், ரஹானேயின் வருகை கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. ஆனால் ரஹானேவுக்கு இடம் கிடைப்பது சந்தேகமே என்று டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங் தெரிவித்தார். ரிஷாப் பண்ட் கடந்த ஆண்டை போல் இந்த சீசனிலும் அசத்துவார் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, அணில் கும்பிளேயின் பயிற்சியில், புதிய கேப்டன் லோகேஷ் ராகுல் தலைமையில் களம் இறங்குகிறது. சமீபத்தில் இங்கிலாந்து தொடரின் காட்டிய அதிரடி விளையாட்டு ஐ.பி.எல்-லும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'சிக்சர் மன்னன்' கிறிஸ் கெய்ல் வெளியே உட்கார வைக்கப்படலாம். மேலும் பந்துவீச்சில் முஜீப் ரகுமான், கரிபியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் காட்டிய அதே வேகத்தை ஐ.பி.எல்.-லிலும் காட்ட வாய்ப்புள்ளது. மேலும், மயங்க் அகர்வால், நிகோலஸ் பூரன், சர்ப்ராஸ் கான், முகமது ஷமி, காட்ரெல் என்று தரமான வீரர்கள் அணியில் உள்ளனர்.

மொத்தத்தில் இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். இவ்விரு அணிகளும் 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி அதில் 14-ல் பஞ்சாப்பும், 10-ல் டெல்லியும் வெற்றி கண்டுள்ளன.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil
Top