Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அஜித்குமாரின் தாயார் மறைவு - முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சென்று அஞ்சலி!

அஜித்குமாரின் தாயார் மறைவு - முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சென்று அஞ்சலி!

News7 Tamil 1 week ago

டிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். கடந்த சில நாட்களாகவே வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று காலை சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்தனர். அஜித் தாயாரின் இறுதி சடங்கு இன்று காலை சென்னை பாலவாக்கத்தில் உள்ள வீட்டில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜய், அஜித்தின் தாயார் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்குமார் இல்லத்திற்கு நேற்று இரவு சென்ற முதலமைச்சர் விஜய் அங்கு வைக்கப்பட்டுள்ள அஜித்தின் தயார் மோகினி மணி உடலுக்கு மாலை அறிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அஜித் மற்றும் குடும்பத்தாருக்கு, முதல்வர் ஆறுதல் தெரிவித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil