Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இரவு 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

இரவு 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

News7 Tamil 3 weeks ago

மிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.

இதனால் இன்று தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் தமிழ் நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிபேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, தேனி, கன்னியாக்குமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil