Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காமன்வெல்த் 2026: குத்துச்சண்டையில்  2 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா!

காமன்வெல்த் 2026: குத்துச்சண்டையில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா!

News7 Tamil 2 weeks ago

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் 2026 காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெண்களுக்கான 54 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் தங்கம் வென்று அசத்தியுள்ளார். அவர் இருதிப்போட்டியில் கனடாவின் ஸ்கார்லெட் டெல்காடோவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார். முதல் சுற்றில் ஐந்து நடுவர்களும் 10-8 என்ற கணக்கில் இந்திய வீரருக்குச் சாதகமாக ஒருமனதாகத் தீர்ப்பளித்து, அவரை வெற்றி பெறச் செய்தனர். இதனையடுத்து இரண்டாவது சுற்றிலும் ஆதிக்கம் செலுத்திய பிரீத்தி பவார் தங்கப்பதக்கத்தை உருதி செய்தார்.

இந்த நிலையில் சிறிது நேரத்திலேயே இந்திய குத்துச்சண்டை வீராங்கனை, ஜாஸ்மின் லம்போரியாவும் பெண்களுக்கான 57 கிலோ எடைப் பிரிவில் மைக்கேலா வால்ஷை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார். முதல் சுற்றில் லம்போரியா கடுமையாகப் போராடிய மு வெற்றி பெற்றாலும், இரண்டாவது சுற்றில் ஆதிக்கம் செலுத்தி, ஒருமனதான தீர்ப்பைப் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் இன்று ஒரே நாளில் இந்தியாவுக்கு குத்துச்சண்டை போட்டியில் 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil