Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காங்கிரஸிடம் முதலமைச்சர் விஜய் கவனமாக இருக்க வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்.!

காங்கிரஸிடம் முதலமைச்சர் விஜய் கவனமாக இருக்க வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்.!

News7 Tamil 8 hrs ago

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சி.பா. ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து பத்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;

எளிய மக்களிடம் ஊடகத்தில் எடுத்துச் சென்றதை அரசியல் விழிப்புணர்வை சாமானிய மக்களிடம் எடுத்துச் சென்றதில் ஆதித்தனார் அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. அவருக்கு மரியாதை செலுத்துவது தமிழுக்கு மரியாதை செலுத்துவது போல்.

ஒரு சாக்லேட்டை வைத்து புரட்சி செய்ய முடியும் என்றால் அதை நாம் பிரதமரால்தான் முடியும். அவர் இந்திய திருநாட்டிற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதுவரை 18 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி 12 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இரண்டு சம்பவங்கள் மனதை உலுக்கியது. திருச்சியில் செவிலியர் மாணவி அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தது மனதை குலுக்குவதாக இருந்தது. அச்சம்பவத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பத்து வயது குழந்தையின் மரணம் மிகவும் வருத்தத்திற்குரியது. சிங்க பெண்கள் படையை உருவாக்கினீர்கள் வளரும் சிங்கப்பெண்களை காப்பாற்ற முடியாமல் தவிக்கிறார்களே என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது. முதலமைச்சர் உடனே தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்

மிருகங்கள் வாழும் நாட்டில் குழந்தைகள் உலா வருகிறார்கள் அவர்களை கண்டித்து வளர்ப்பதை விட கண்காணித்து வளர்க்க வேண்டும். மின்வெட்டு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அமைச்சர் நிர்மல் குமார் அதிகாரிகள் மீது குற்றம் சொல்கிறார். அதிகாரிகள் மீது குற்றம் இருந்தால் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்கள் வெற்றியில் திமுகவுக்கு பங்கு இல்லை, திமுக செய்த குற்றத்திற்கும் எங்களுக்கு பங்கு இல்லை என காங்கிரஸ் செல்கிறார்கள். காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது என்று திமுக சொல்கிறது. முதுகில் குத்தும் பழக்கம் காங்கிரஸ் உடையது. அதனால் முதலமைச்சர் விஜய் கவனமாக இருக்க வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன் என்ன சொல்கிறார்? நாங்கள் இன்னும் அந்த கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் இங்கு அமைச்சரவையில் இருக்கிறோம் என்று சொல்கிறார். ஒரு நிச்சயமற்ற தன்மை இருக்கிறது.

பாஜக வெற்றி பெற்றதற்கு அவர்கள் கடுமையான உழைப்பு தான் காரணம். பாராளுமன்றத்தில் காங்கிரசிற்காக திமுகவினர் பாஜகவை கடுமையாக எதிர்த்தார்கள். ஒரு ஆட்சி இப்போது தான் வந்துள்ளது. அதை செயலாற்ற விட வேண்டும். அது கவிழ்ந்து விடும் என்று நிச்சயம் இல்லாமல் பேச வேண்டாம். இந்த ஆட்சியாளர்கள் எச்சரிக்கையாக எடுக்க வேண்டும். 108 இடங்கள் மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அதை இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் மக்களின் முழு ஆதரவு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil