Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கர்நாடக முதலமைச்சராக ஜூன் 3 ஆம் தேதி பதவியேற்கிறார் டி.கே.சிவக்குமார்.!

கர்நாடக முதலமைச்சராக ஜூன் 3 ஆம் தேதி பதவியேற்கிறார் டி.கே.சிவக்குமார்.!

News7 Tamil 2 weeks ago

ர்நாடகாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் அக்கட்சியில் முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

இதனால் ஆட்சியின் முதல் 2.5 ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த 2.5 ஆண்டுகள் டி.கே.சிவக்குமாரும் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்வதாக ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

முதலமைச்சராக சித்தராமையா 3 ஆண்டுகள் பதவி வகித்தார். இதையடுத்து ஒப்பந்தப்படி தனக்கு முதலமைச்சர் பதவி வழங்கக்கோரி காங்கிரஸ் மேலிடத்தில் கோரிக்கை வைத்தார் டி.கே.சிவக்குமார். இதனை தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனையின் படி கர்நாடக முதலமைச்சர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவராக டி.கே.சிவக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து கர்நாடக முதலமைச்சராக பதவியேற்க டி.கே.சிவக்குமாருக்கு அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அழைப்பு விடுத்துள்ளார். இதன் படி கர்நாடக முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் வரும் 3ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil