Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவல் பணியிடங்கள் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவல் பணியிடங்கள் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

News7 Tamil 3 days ago

மிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று முதலமைச்சர் வசம் உள்ள காவல்துறை - தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை நீதான் அமானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் அறிவித்ததாவது, '

காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவல் பணியிடங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும். போதைப்பொருளை ஒழிக்கும் கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும். ரூ.212 கோடி ஒதுக்கீட்டில் காவல்துறை நவீனமயமாக்கப்படும்.

நடப்பாண்டில் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும். பணியின்போது உயிரிழக்கும் காவலர் குடும்பத்திற்கு தரப்படும் கருணைத்தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும். காவல்துறை சிறப்பு பிரிவுகளுக்கு எதிர்பாரா செலவீனம் உயர்த்தப்படும். வண்டலூரில் உள்ள காவலர் உயர்பயிற்சியத்தில் உள் விளையாட்டு வசதிகள் ரூ.23 கோடியில் ஏற்படுத்தப்படும்.

காவல்துறை சிறப்பு பிரிவுகளுக்கு எதிர்பாரா செலவீனம் உயர்த்தப்படும்.' என்று அறிவித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil