Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கிர்கிஸ்தான் சென்றடைந்தார் பிரதமர் மோடி!

கிர்கிஸ்தான் சென்றடைந்தார் பிரதமர் மோடி!

News7 Tamil 1 week ago

பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்டிற்குச் சென்றடைந்தார்.

தாஷ்கண்ட் விமான நிலையத்தில் பிதமர் மோடியை உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ் கட்டித் தழுவி வரவேற்றார். தொடர்ந்து பிரதமர் மோடிக்கு தாஷ்கண்டில் உள்ள ஒரு ஓட்டலில் இந்திய வம்சாவளியினர் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரதமர் மோடி யாங்கி உஸ்பெகிஸ்தான் பூங்காவிற்குச் சென்று, சுதந்திர நினைவுச் சின்னத் தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து உஸ்பெகிஸ்தானின் உயரிய விருதான, 'Oliy Darajali Dustlik' ( உன்னத நட்புக்கான விருது ) விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கெளரவித்தார் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ்.

இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தையில், நீண்ட கால யுரேனியம் விநியோக ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் வர்த்தகத்தை மேம்படுத்துவதுடன், பாதுகாப்பு, டிஜிட்டல் தொடர்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி இரண்டு நாள் உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று கிர்கிஸ்தான் சென்றடைந்தார். நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். அவரை மனாஸ் சர்வதேச விமான நிலையத்தில், அந்நாட்டின் அமைச்சரவையின் தலைவர் அடில்பெக் கஸிமலியேவ் வரவேற்றார். பிரதமர் மோடிக்கு கிர்கிஸ்தானில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பாரம்பரிய நடனங்களை ஆடியும், கலாசார நிகழ்ச்சிகளை நடத்தியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். மேலும் கிர்கிஸ்தான் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிற உறுப்பு நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil