Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மகள் திருமணம் : தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பு விடுத்த குஷ்பு - சுந்தர்.சி!

மகள் திருமணம் : தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பு விடுத்த குஷ்பு - சுந்தர்.சி!

News7 Tamil 2 weeks ago

1990 களில் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர் நடிகை குஷ்பூ. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்த குஷ்பு, முறைமாமன் படத்தின் இயக்குநர் சுந்தர்.சி.யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா ஆகிய இரு மகள்கள் உள்ளனர். குஷ்பு தற்போது தற்போது தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் குஷ்பு - சுந்தர்.சி தம்பதி, தங்களின் மூத்த மகள் அவந்திகா திருமணத்திற்காக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளார். இதனிடையே விஜய்யை சந்தித்தது தொடர்பாக குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், 'எங்கள் குடும்பத்திற்கு மிகவும் சிறப்பான மற்றும் மறக்க முடியாத நாள்! எங்களது அன்பிற்குரிய சகோதரரும், தமிழகத்தின் முதலமைச்சருமான ஜோசப் விஜய் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, எங்கள் மகள் மற்றும் ஷ்ரவண் ஸ்ரீனிவாசன் ஆகியோரின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினோம்.

​அவரைப் பார்க்கும் போதெல்லாம் எங்கள் இதயம் பெருமையாலும் மகிழ்ச்சியாலும் நிறைகிறது. குழந்தைகள் அனைவரும் மிகுந்த உற்சாகமடைந்து, அவரிடமிருந்து தங்கள் கண்களை எடுக்கவே இல்லை. தனது பிஸியான பணிச்சுமைக்கு இடையிலும், எப்பொழுதும் போல அதே பாசம், அரவணைப்பு மற்றும் அழகான புன்னகையோடு எங்களை வரவேற்றார். உங்கள் பொன்னான நேரம், அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுக்கு மிக்க நன்றி சகோதரரே. அதை வார்த்தைகளால் முழுமையாக வெளிப்படுத்த முடியாது'. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil